பிரமிட் திட்டங்களை நம்பி ஏமாறவேண்டாம் - இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்
பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இணையவழித்தளங்கள் ஊடாக செயற்படும் சில பிரமிட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
‘‘இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது. இத்திட்டம் உரிய வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றது, நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்குச் செலுத்தவேண்டும். அன்றேல் அவர்களது நிதியங்கள் மத்திய வங்கியினால் முடக்கப்படும், இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது' என்பன போன்ற விடயங்களே தமது திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக சில பிரமிட் திட்ட ஏற்பாட்டாளர்களால் கூறப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.’’
இவ்வாறான கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இக்கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான ஆலோசனை
எனவே இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
மேலும் இத்திட்டங்களில் முதலீடு செய்வதனூடாக பொதுமக்கள் பணத்தை இழக்கக்கூடும் என்பதனால், இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் விபரங்களை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
