மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம்.. கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய கோரும் விமல்
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்திற்கு பாதகமான செயல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தினால் அவருடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான பல செயல்களை அவர் செய்துள்ளார்.

அத்துடன், நந்தலால் வீரசிங்க மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. இதனால், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டை விட்டுத் தப்பி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அபாயம் உள்ளது.
எனவே, அவ்வாறான ஒரு அபாய நிலை ஏற்படுவதற்கு முன்னதாவே நந்தலால் வீரசிங்கவின் கடவுச் சீட்டுக்கள் பறிக்கப்பட்டு, வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam