இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்
இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையானது இலங்கை பெருமதியில் (LKR) இரண்டு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி
இலங்கையில் இந்தியன் வங்கியானது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு கிளைகளுடன் இயங்கி வருகிறது.

"இலங்கையில் உள்ள இந்தியன் வங்கியும் அதன் கிளைகளும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன" என்று மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.
இருப்பினும், அபராதத்திற்கான காரணம் தொடர்பில் இந்தியன் வங்கி எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam