இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! : தமிழக மீனவர்கள் கோரிக்கை

India Government Sea Fishermen Sri Lanka Navy Sri Lanka '
By Ashik Jan 04, 2022 10:51 AM GMT
Report

 இலங்கை, இந்திய நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோரிக்கை முன்வைப்பதாக ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி கடந்த 13 நாட்களுக்கு பின்பு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாத நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மீண்டும் கரை திரும்பியுள்ளதாக ராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா மேலும் தெரிவிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக மீனவர்களையும் அவர்கள் சென்ற 10 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து நேற்று திங்கட்கிழமை (3) காலை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் தனுஷ்கோடி கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

மேலும் நேற்று திங்கட்கிழமை (3) மாலை முதல் தொடர்ந்து கடலில் வீசி வரும் கடும் காற்று காரணமாக படகுகள் எல்லை தாண்டி சென்று விட்டால் இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாரிய நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் வரத்து இல்லாமல் கரை திரும்பியதால் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.     

தொடர்புடைய செய்திகள்     

முல்லைத்தீவு கடலில் இந்திய மீனவர்களின் அட்டகாசம்!

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US