முல்லைத்தீவு கடலில் இந்திய மீனவர்களின் அட்டகாசம்!
முல்லைத்தீவு கடலில் நேற்று இரவு (03 ) தொடர்சியாக இந்திய இழுவைப்படகுகள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் இரவு 7.00 மணிதொடக்கம் முல்லைத்தீவு சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்பகுதியில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது இறால் பிடிப்பதற்கான காலம் தொடங்கியுள்ளதால் இந்திய மீனவர்கள் இழுவை மடி தொழிலை மேற்கொண்டு எமது கடல்வளங்களை சுறண்டி செல்கின்றார்கள் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும்
இந்திய இழுவை படகுகள் கரையில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரம்வரையும் வந்து
தொழில் செய்கின்றமை குறித்து முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் அதிப்தி வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
