கிளிநொச்சியில் விவசாயம் சார் நடவடிக்கைக்கான பொருளாதார தொகைமதிப்பு தொடர்பில் தெளிவூட்டல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான குடிசன தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின், பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அணுசரனையில், கிளிநொச்சி மாவட்டத்தின் தொகைமதிப்பு ஆணையாளர்கள் மற்றும் மாவட்டத் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த விடயம் தொடர்பில் விழிப்பூட்டும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளிவிபக் கிளைத் தலைவர் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் சி.ஜெயவிந்தன் தலைமையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விவசாய புள்ளிவிவரங்கள்
இதன்போது, விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய புள்ளிவிவரங்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது. மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ. நளாஜினி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், பிரதேச செயலாளர்கள் மற்றும் புள்ளி விபரக் கிளை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


