பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு சீமெந்து மூட்டைகள் அதிகாரிகளால் மீட்பு (Photo)
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சீமெந்து மூட்டைகளை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்பணை செய்த சில வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுமார் 800க்கு மேற்பட்ட சீமெந்து மூட்டடைகளை மீட்டதுடன், இதனை பொறிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர்சதாத் (R.F.Anwarsadath) தலைமையில் இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
இதன் போது சீமெந்து மூட்டையில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்த வரத்தக நிலையங்களுக்கு சென்ற நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் குழு அங்கு சீமெந்து மூட்டைகளை மீட்டு அதில் பொறிக்கப்பட்ட விலைகளுக்கு அவ்விடத்திலேயே பொது மக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன் போது சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதுடன் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த உரிமையாளர்கள் சிலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆர்.எப்.அன்வர்சதாத் தெரிவித்துள்ளார்.
சீமெந்து மூட்டைகள் அதில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் உடனடியாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறியத்தருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.











பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
