விபத்துக்குள்ளான சீமெந்து லொறி : வீதியில் சிதறிக் கிடந்த சீமெந்து மூட்டைகள்
திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பேராற்று வெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (10.02.2026) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
திருகோணமலையில் இருந்து சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மாத்தளை நோக்கி பயணித்த குறித்த லொறி, கந்தளாய் – பேராற்று வெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப முயன்றுள்ளது.

இதன்போது எதிரே வந்த ‘பொலேரோ’ (Bolero) ரக வாகனத்திற்கு வழி விடுவதற்காக லொறியை ஓரமாகச் செலுத்தியபோது, பாரம் தாங்க முடியாமல் லொறியிலிருந்து 150க்கும் மேற்பட்ட சீமெந்து மூட்டைகள் வீதியில் சரிந்து விழுந்ததாக லொறியின் சாரதி தெரிவித்துள்ளார்.
வீதியில் விழுந்த சீமெந்து மூட்டைகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
அதிகாலை நேரத்தில் விபத்து இடம்பெற்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




