இலங்கையில் மருந்தகத்துறையின் 73 மூலக்கூறுகளுக்கு உச்சவரம்பு விதிப்பு
இலங்கையில் மருந்தகத்துறையின் 73 மூலக்கூறுகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் இந்த 73 மூலக்கூறுகளுக்கும் விலை உச்சவரம்பை விதித்திருந்தது.
ரூபாயின் மதிப்பு குறைந்த நிலையில் மருந்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதன் காரணமான அதன் விலை அதிகரிக்கிறது.
இதனையடுத்து அரசாங்கமும் கட்டுப்பாட்டாளர்களும் மருந்துகள் மீதான தற்காலிக விலைக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர் என்று இலங்கையின் தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையகத் துணைத் தலைவர் சஞ்சீவ விஜசேகர கூறியுள்ளார்.
இதேவேளை மருந்துகளின் விலையை திட்டமிட்டு செயற்படுத்தும்போது, பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் நல்ல தரமான மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று சஞ்சீவ விஜசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் நோயாளிகளுக்காக உலகெங்கிலும் உள்ள 364 உற்பத்தியாளர்களிடமிருந்து 800 மருந்து மூலக்கூறுகள் விநியோகிக்கப்படுகின்றன.