இலங்கை மின்சார சபையில் மீண்டும் ஏற்பட்ட குழப்பம்:ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பொறியியலாளர்களை நியமிக்கத் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சங்கம் தெரிவித்த கருத்துக்கள்: மின்சார சபையின் உள்ளேயே தேவையான தகுதிகளை பூர்த்தி செய்த பொறியியலாளர்கள் இருக்கும்போது, வெளிப்புற தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வது அநியாயமானதாகும்.
தனியாருக்கு வழங்கப்படும் பெரும் தொகை பணம்
மேலும், ‘Sri Lanka Energies’ எனப்படும் தனியார் நிறுவனம் மூலம் இந்த ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படுவதால் மின்சார சபைக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட தொடர்புகள் அல்லது ஏதாவது சலுகை அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக செலவாகும் வீணான தொகை இறுதியில் மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri