இலங்கை மின்சார சபையால் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செலுத்தப்படாத மின் கட்டணங்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
தேக்கநிலையில் கட்டணங்கள்
எனினும், அண்மைய கட்டண அதிகரிப்புக்கு, ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக கட்டணங்கள் தேக்கநிலையில் இருந்தமையே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, படிப்பதற்கு மின்சாரத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எண்ணெய் விளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகளும் படிப்பதற்கு போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம், எண்ணெய் விளக்கில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், இன்றைய பெற்றோர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மட்டுமே நம்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |