சப்போரிஜியா அணுமின் நிலைய பழுதுபார்ப்பு பணிகளுக்காக உக்ரைனில் தற்காலிக போர்நிறுத்தம்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்போரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி தற்காலிக மற்றும் குறிப்பிட்ட பகுதி அளவிலான போர்நிறுத்தத்திற்கு சர்வதேச அணுசக்தி முகமை வழிவகை செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக ஐநாவின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், சப்போரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தற்போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து போரினால் ஏற்பட்ட சேதங்களை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அணுசக்தி முகமை
2022ல் போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவந்த ஆறாவது தற்காலிக போர்நிறுத்தம் இதுவாகும்.

அணுமின் நிலையத்தின் குளிர்விப்பு அமைப்பிற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் 'டினிப்ரோவ்ஸ்கா' மின் பாதையை பழுதுபார்ப்பதற்காக மாஸ்கோ மற்றும் கைவ் ஆகிய இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த போர்நிறுத்தம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை இரு தரப்பிலும் தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சப்போரிஜியா பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர்.
மேலும், கைவ், கெர்சன் மற்றும் கொனோடோப் ஆகிய பகுதிகளிலும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர்