சிரிய அரசு மற்றும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம்
சிரிய அரசு - சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே களத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க சிரிய அரசாங்கமும் அந்த படைகளும் அனைத்து முனைகளிலும் உடனடி போர் நிறுத்தத்திற்கு (Ceasefire) உடன்பட்டுள்ளதாக சிரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான SANA செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சிரிய ஜனநாயகப் படைகள் யூப்ரடீஸ் நதிக்கு (Euphrates River) கிழக்கே பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளன.
அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான
வடக்கு சிரியாவின் அலெப்போ மற்றும் இதர பகுதிகளில் ஏற்பட்ட கடும் மோதல்களைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, தற்காலிக அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, துருக்கி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தீவிர மத்தியஸ்தம் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கொண்ட வடகிழக்குப் பகுதிகளை மீண்டும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவே இந்த நகர்வுகள் பார்க்கப்படுகின்றன.
இதேவேளை சிரியாவின் புதிய பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சர் அனஸ் கட்டாப் (Anas Khattab) உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து 'X' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரிய அரபு இராணுவம் சமீபத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த புதிய பகுதிகளில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொது வாழ்க்கையைச் சீராக முன்னெடுத்துச் செல்லவும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த திறமையுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருவது
மேலும், இந்தப் பகுதிகளுக்கென அமைச்சகம் ஒரு விரிவான பாதுகாப்பு மூலோபாயத்தை வகுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாத்தல், உரிமைகளைப் பேணுதல் மற்றும் அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டத் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு, சிரியாவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்றும் அமைச்சர் அனஸ் கட்டாப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் சிரியாவில் சிரிய அரசுப் படைகளுக்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே வெடித்துள்ள சமீபத்திய மோதல்கள் அமெரிக்காவிற்கு ஒரு "கனவு போன்ற இக்கட்டான சூழலை" (nightmare scenario) ஏற்படுத்தியுள்ளதாக லண்டன் கிங்ஸ் கல்லூரி விரிவுரையாளர் ராப் கெய்ஸ்ட் பின்ஃபோல்ட் (Rob Geist Pinfold) எச்சரித்துள்ளார்.
சிரியா தற்போது முழுமையான உள்நாட்டுப் போர் நிலையை எட்டவில்லை என்றாலும், வளங்கள் நிறைந்த பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிரிய அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருவது அமெரிக்காவிற்குப் பெரும் கவலையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஒருபுறம் தனது நட்புப் படையான சிரிய ஜனநாயகப் படைகளை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திலும், மறுபுறம் சிரியாவின் புதிய அதிகார மையங்களுடன் இணக்கமாகச் செல்ல வேண்டிய நிலையிலும் இருப்பதால், இந்த மோதல் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri