போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ஏற்றுக்கொள்ள முடியாத ரஷ்யாவின் நிலைப்பாடு...
உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிலைப்பாடு "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலை நடத்திய பின்னர் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் நிலைப்பாடு
இது தொடர்பில் வெளியான ஒரு அறிக்கையில்,“ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியாதது. இது முதல் முறையாக நடைபெறும் ஒன்றல்ல என கூறியுள்ளனர்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான அந்த சந்திப்பு மற்றும் ஜனாதிபதி ட்ரம்புடனான கலந்துரையாடலின் விளைவாக, நாங்கள் இப்போது எங்கள் பதில்களை நெருக்கமாக சீரமைத்து ஒருங்கிணைத்து வருகிறோம் என தலைவர்கள் கூறியுள்ளனர்.