வேலணையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை
வேலணை நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் அசோக்குமாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலணை பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள்
அண்மைக்காலமாக வேலணை பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபையில் வேலணை பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் அத்தியாவசிய பிரச்சினைகள், தேவைப்பாடுகள் குறிப்பாக குடிநீர், சுகாதாரம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய இடங்களில் CCTV கண்காணிபுக்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam