அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கண்டறிய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதற்கமைய அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வாகன புகை முகாமைத்துவம்
வாகன புகை முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பொலிஸ் சிசிடிவி தரவுகளைப் பயன்படுத்துவதோடு, சிசிடிவி கமரா அமைப்பை நவீனமயமாக்கவும் மேலும் விரிவுபடுத்தவும் இந்த நிதியம் முழு ஆதரவையும் வழங்கும் என்று டி.எம்.டி ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதேவேளை வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம், வாகன புகைகளால் அதிகரித்து வரும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல உத்திகளை செயல்படுத்தி வருகிறது. வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஒரு மதிப்புமிக்க தேசிய சொத்து என்றும் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் டி.எம்.டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
