மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறிய அருந்திக பெர்னாண்டோ
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து (CCIB) வெளியேறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை வருகை தந்த நிலையில், பல மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03) அழைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம்
இதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தற்போது வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.