இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
1 இலட்சத்து 75ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்த உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.
அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan