நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள்
தம்மை ஒரு சுயாதீன நிறுவனமாக பிரகடனப்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மத்திய வங்கியின் அதிகாரிகளிடம், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு (COPE) அல்லது பொது நிதிக்கான குழு (COPF) என்பன விளக்கம் பெற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மத்திய வங்கி தன்னை ஒரு சுயாதீனமான நிறுவனமாக அடையாளப்படுத்தியுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவகாரம் தொடர்பில் கேள்வி
இந்த விவகாரம் குறித்து சபையில் உள்ள எந்தக் குழுவும் மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
