மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்: சொகுசு ஹோட்டலில் அவசர சந்திப்பு
கரூர் சம்பவம் தொடர்பில் தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கோரிக்கை
விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று ( 13) சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகின்றது.
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் சுமார் 7 மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் சின்னம் விவகாரம்
சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பவில்லை எனவும், அவர் சொகுசு ஹோட்டலில் தங்கி அங்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த சட்ட ஆலோசனைகளை சட்ட நிபுணர்களிடம் பெற்றதாக தெரிகின்றது.

மேலும் ஜனநாயகன் விவகாரம், தேர்தல் சின்னம் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தவிர, தேர்தல் கூட்டணி ஆலோசனையும் நடந்துள்ளதுடன், இது தொடர்பாக சில அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் இன்று சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது.