இலங்கையில் உள்நாட்டு போர் வெடிக்க இதுவே காரணம் - இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் எனவும் உள் பிளவை உருவாக்குவதுடன் மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும் என இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது தாராளமய ஜனநாயகம் குறைவாக உள்ளது. இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது சிறுபான்மையின மக்களை அவர்கள் நடத்திய விதத்தையும் குறிக்கும்.
இலங்கையின் நிலை என்பது ஒரு பாடம்
இலங்கையில் சிறுபான்மையினராக அதிகளவில் தமிழர்கள் இருந்தனர். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. இதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாத நிலையில் தான் உள்நாட்டு போர் வெடித்தது.
என்னை பொறுத்தவரை இலங்கையின் நிலை என்பது ஒரு பாடம் என கூறுவேன். ஏனென்றால் இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பது ஒரு நாட்டுக்கு முக்கியமானதாகும். அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுவாக வைக்கும்.
இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுப்பதாக சிலர் பேசுகின்றனர். சிலர் நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் சர்வாதிகார தலைமை தேவை என நினைக்கின்றனர். இதுமுற்றிலும் தவறானது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதாவது.
அதுமட்டுமல்லாது, பொருள்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் ஒரு தோல்வியடைந்த வளர்ச்சி (காலாவதியான) மாடலையே இவை அடிப்படைப்படையாக கொண்டுள்ளது.
மேலும் இது புதிய சிந்தனைக்கான மாடல் அல்ல என்று ரகுராம் ராஜன் கூறினார். அதேபோல் நமது நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியை பார்த்தோம் என்றால், செயல்திறன் மிகவும் குறைவாக இருக்கிறது.
தாராளமயம் மதத்திற்கு எதிரானது அல்ல
சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் நாட்டை பிளவுபடுத்தும் மற்றும் உள் பிளவை உருவாக்கும். மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும்.
பெரும்பான்மைவாதம் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. புவி-அரசியல் வளர்ச்சியின் இந்த யுகத்தில் அது நம்மை பாதிப்படையச் செய்வதுடன், வெளிநாட்டு தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கும் என்று கூறினார்.
மேலும், பணப் பற்றாக்குறை உள்ள இலங்கையின் உதாரணத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நாடு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி சிறுபான்மையினரைத் தாக்க முயலும் போது, அது எங்கும் நல்லதல்ல என்பதை நாம் தெற்கே பார்க்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தாராளமய ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய ராஜன், தாராளவாத ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளை வலுப்படுத்துவதில்தான் நமது எதிர்காலம் உள்ளது, அதை பலவீனப்படுத்துவதில் அல்ல.
தாராளமயம் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்றவர், ஒவ்வொருவரிடமும் நல்லதை தேடுவதே ஒவ்வொரு மதத்தின் அடிப்படை. இது தாராளவாத ஜனநாயகத்தின் சாராம்சமும் கூட என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.