முல்லைத்தீவில் புயலின் தாக்கம் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலை சீரின்மை காரணமாக வீசிய கடும் புயல் மற்றும் குளிர் காற்று கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெருமளவான மக்களின் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
மழை வீழ்ச்சி
மாவட்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி மாங்குளத்தில் பதிவாகி இருக்கின்றது. இதேவேளை ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் பெருமளவான கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
கால்நடைகள் பட்டியில் கட்டப்பட்ட நிலையில் குளிர் தாங்க முடியாமல் எல்லாம் உயிரிழந்து ஆங்காங்கே விழுந்து உயிரிழந்துள்ளத. இதனால் பல கோடி பெறுமதியிலான சொத்துக்களை தாங்கள் இழந்துள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை மன்னார் கண்டல் பகுதியில் இரவு வேளை காட்டு யானை விவசாய நிலங்கள் மற்றும் ஊர் மனைகளுக்குள் புகுந்துள்ளன காட்டு யானைகளும் குளிர் தாங்க முடியாமல் மக்களின் விவசாய நிலங்களை அளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவலின்படி "மண்டோஸ்" புயல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடும் காற்று
நேற்று இரவு பலத்த மழையுடன் வீசிய கடும்காற்றினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்ததுவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று (09.12.2022) காலை 10 மணிவரையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வீடுகள் பகுதியளவில் சேதமைடைந்ததுடன் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு, ஆனந்தபுரம் முதலிய கிராமங்களும், மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்குளம்கிராமம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாங்குளம், பேராறு கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி, முள்ளியவளை மத்தி, வண்ணாங்குளம் கிராமங்களும் பாதிப்பு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
