யாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் (Photos)
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.
நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வட மாகாணத்தில் 300இற்கும் மேற்பட்ட மாடுகளும், 180இற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும்
அதேவேளை யாழ். மாவட்டத்தில் 80இற்கும் மேற்பட்ட ஆடுகளும், 20 தொடக்கம் 30இற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும், அத்துடன் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
you may like this video...

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
