இலங்கை கத்தோலிக்க திருச்சபை அனைத்து மதத்தவர்களிடமும் விடுத்துள்ள வேண்டுகோள்
2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமாகும், நீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடியை ஏற்றி வைக்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
எனவே இந்தப் பிரச்சினையில் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றும் முடிவு எட்டப்பட்டதாக திருச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டன. கொடிய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக, கத்தோலிக்க மதகுருமார் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம், கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதிக்கு 19 பக்க கடிதத்தை அனுப்பியது.
மேலும், படுகொலைக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.