கிறிஸ்மஸ் தின நிகழ்வொன்றில் பாடகி ஒருவரின் ஆடையால் எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையின் ராகமையில் உள்ள பசிலிக்கா லங்கா மாதா தேவாலயத்திற்கு வெளியே கிறிஸ்மஸ் தின ஒலிப்பதிவுக்காக பாடகி ஒருவர் அணிந்திருந்த ஆடை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்றை இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டித்துள்ளது.
தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற நத்தார் தின ஒலிப்பதிவுக்காக பாடகி நடாஷ பெரேரா அணிந்திருந்த ஆடை தொடர்பில் பேராயர் சமூக தொடர்பு மற்றும் கலாசார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு திருச்சபையின் அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மீது சிலர் குற்றம் சாட்டுவதாக திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
வருத்தம் தெரிவிக்க மறுப்பு
எனினும் இது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியே தவிர திருச்சபையின் நிகழ்ச்சி அல்ல என்று திருச்சபை விளக்கம் அளித்துள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சிக்கான ஆடை உட்பட்ட விடயங்களை தனியார் தொலைக்காட்சியே ஏற்பாடு செய்திருந்தது. நத்தார் நிகழ்ச்சி என்பதன் காரணமாகவே தேவாலயமும் இந்த ஒளிப்பதிவுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் குறித்த பாடகியின் ஆடை தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி வலையமைப்பு இதுவரை நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க மறுத்து வருவதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |