அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுமக்களின் அவலத்தை பரிசீலிக்க வேண்டும்: கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு வலியுறுத்து
அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களின் சொல்லாடல்கள் மற்றும் அரசியல் நாடகங்களை நடத்துவதற்கு முன்னர்,பொதுமக்களின் அவலத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இதனால் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள், குறைந்தபட்சம் தங்களின் அடிப்படைத் தேவைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்லமுடியும்.
இலங்கை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாடு மற்றும் அதன் குடிமக்கள் திறமையானவர்கள், மற்றும் அதன் இளைஞர்கள் படித்தவர்கள். எனவே, ஒவ்வொருவரின் கண்ணியமும் மதிக்கப்படும் சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.
உண்மையான வெளிப்பாடு
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் தேசத்தின் அரசியல் வாழ்வில் மக்களின் பங்கேற்பு போன்ற ஜனநாயகத்தின் உண்மையான வெளிப்பாடான அமைதி, நல்லிணக்கம் மற்றும் உண்மையான வெளிப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தநிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்;, சமூகத்தின்; கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கருவிகளாக இருக்கவேண்டுமென்பதை அதிகாரிகள் உணரவேண்டும் என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹரோல்ட் அந்தோனி வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் தகுதிவாய்ந்த மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகள், தங்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
விலை கட்டுப்பாடு இல்லை
கல்வியும் ஆபத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. குழந்தைகள் சரியான உணவு, உடை மற்றும் அவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள் இல்லாமல் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.
இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் பெற்றோர்கள் இல்லை. சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. நாளாந்தம் கொலைகள் நடைபெறுவதுடன், மது அருந்திவிட்டு, அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதால், சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தவிர, மக்களின் உடனடி அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்கான தெளிவான பார்வை எதுவும் நாட்டில் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு இல்லை.
பலர் பட்டினியின்
விளிம்பில் உள்ளனர்.
அத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய அரிசி, முட்டை, உள்ளிட்ட பல
உணவுப் பொருட்கள் இன்னும் இறக்குமதி செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது
என்றும் ஆயர்கள் மாநாடு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 51 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
