ஹட்டன் - நோர்டன் பிரதான வீதியின் பாலத்தை புனரமைக்கும் இராணுவத்தினர்
நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் காசல்ரீ பகுதியில் உள்ள ஹட்டன் - நோர்டன் வீதியில் பாலம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாலும் புதிய பாலம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்படி இன்று(10) அதற்கான தற்காலிக இரும்புப் பாலத்தைப் பொருத்தும் கட்டுமானப் பணிகளுக்கு கண்டியில் அமைந்துள்ள பல்லேகெல 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர்களின் பங்களிப்பு
இந்த பாலத்தின் கட்டுமானத்திற்காக காசல்ரீயைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (30) திகதி குறித்த பாலம் இடிந்து விழுந்ததிலிருந்து, மாற்று வழிகள் வழியாக அந்த வீதியில் போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி, ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri