காசல்ரீ நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை (Video)
இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.
தானியங்கி வான் கதவுகள் திறப்பு
இந்த தானியங்கி வான் கதவுகள் வழியாக இன்று (04.10.2022) காலை முதல் நீர் வெளியேறி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என நீர் தேக்கத்தின் கடமை நேர பொறியலாளர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
எனவே காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கு மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அதிகளவான் நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான்
கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam