காலி முகத்திடலை கசினோ சூதாட்டத்துக்கு வழங்கவில்லை : பிரசன்ன ரணதுங்க - செய்திகளின் தொகுப்பு
காலி முகத்திடல் 'போராட்ட களம்' நிலப்பகுதியை கசினோ சூதாட்ட நடவடிக்கைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்து பொய்யானது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு முதலீட்டாளர்களை அழைத்து வரும் போது அதற்கு தடையேற்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக 2022 நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |