இலங்கையில் சூதாட்ட விடுதிகளுக்கான அனுமதி தொடர்பில் சபையில் முன்வைக்கப்பட்ட விடயம்
ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்குமுறை ஆணையம்
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அதற்குரிய ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
கசினோ வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு நிதிக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை.
சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம் வழங்கவும், முறைப்படுத்தவும் முதல் முறையாக இந்த மசோதா கொண்டுவரப்படுவதே முக்கிய காரணம்.

சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம்
பொதுவாக உலகில் சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது.
ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam