போராட்டத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரது குடும்பத்திற்கு நன்கொடை
அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் குடும்பத்திற்கு நன்கொடை தொகை வழங்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அமரகீர்த்தி அதுகோரல
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கடந்த மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது கொல்லப்பட்டார்.
அமரர் அமரகீர்த்தியின் மனைவி மற்றும் மகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவு தொகை வழங்கியுள்ளனர்.
சுமார் 90 இலட்சம் ரூபா பணம் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறப்பினர்களின் பங்களிப்புடன் உதவித் தொகை
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 183 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, இந்த உதவு தொகைக்கான காசோலையை ஜனாதிபதியிடம் வழங்கியதுடன் ஜனாதிபதி ரணில் இந்த உதவு தொகையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.
அமரகீர்த்தி அதுகோரளவின் குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை வழங்குமூறும் கோரப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
