வடக்கு ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (11.11.2025) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்து குறித்த இடமாற்றத்தினை நிறுத்தும் தடை உத்தரவை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது அன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த முறைப்பாட்டாளர் தொடர்பான விடயங்களுக்கு இன்றையதினம் 10ஆம் திகதி சம்பந்தப்பட்ட அரச தரப்பினை பதில் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
தவணையிடப்பட்ட வழக்கு
இவ்வாறான நிலையில், இன்றையதினம் குறித்த வழக்கானது யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரச சட்டத்தரணி தயார் இல்லாத காரணத்தினால் வழக்கானது இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் வழக்குத் தொடுனரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வருகை தந்ததுடன் அவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri