மனைவியைத் தாக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்லி தனது மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள தங்களுடைய வீட்டில் கம்ப்லி மது அருந்தியதாகவும், அவர் வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை தாக்கியதாக கம்ப்லியின் மனைவி அண்ட்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி, ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல மற்றும் அவமதிப்பு ஆகியவை தொடர்பில் வினோத் கம்ப்லி மீது பாந்த்ரா பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனக்கு காயம் ஏற்பட்டது...
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி முதல் 1:30 மணிக்கு இடையில் இருவருக்கும் முறுகல் ஏற்பட்டுள்ளது.
உடனிருந்த அவரது பன்னிரெண்டு வயது மகன், தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், கம்ப்லி கோபத்துடன் சமையலறையிலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, தனது மனைவி மீது வீசியுள்ளார்.
இதன்போது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் அண்ட்ரியா முறையிட்டுள்ளார்.