யாழ்.புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட அமரர் அற்புதராசா அகிலனின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக அதாவது சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு ஊர்காவற்துறை பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும்
தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன் , உப தலைவர் திரு. கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 7ஆம் திகதி(07.10.2025) அன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10.08.2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா ( அகிலன் ) என்பவர் பலியானார்.
இறந்த நபரின் பூதவுடலை 15.10.2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும் 150இற்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர்.
பொதுமக்கள் உணர்பூர்வமாக கோஷங்களை எழுப்பி வீதி மறியலில் ஈடுபட்டதால் யாழ் நகரிலிருந்து அங்கு விரைந்து வந்த யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP) அக்கோரிக்கைகளை இயன்றவரை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் கோரியிருந்தார்.
மேலும் அந்த இடத்திலேயே குறித்த குறிகட்டுவான் காவலரண் பொலிஸ் உத்தியோகத்தருக்கான இடமாற்ற உத்தரவு, கொல்லப்பட்டவரின் வீட்டுக்கான முழு நேர பொலிஸ் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தார்.
அத்தோடு போராட்டம் முடிவுக்கு வந்ததோடு கேரதீவு இந்து மயானத்திற்கு அகிலனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க புதைக்கப்பட்டது.
மூன்று வாரங்களுக்கு முன்பு கைது
அடுத்த தினமே மண்டைதீவு சந்தி சோதனைச்சாவடி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி சோதனை சாவடிகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகளை பொலிசார் ஆரம்பித்திருந்தனர்.
ஆனாலும் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அனலைதீவை சேர்ந்த செல்வகுமார் எனும் நபர் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியினால் யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் தென்னியன்குளம் பிரதேச காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அனலைதீவு செல்வக்குமார் வழங்கிய வாக்கு மூலத்திற்கமைய இக்கொலையானது யாழ் நகரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்த கொலை என்றும் இக்கொலையின் பிரதான சூத்திரதாரியாக புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவினை சொந்த இடமாகவும் தற்காலிக முகவரியாக கொக்குவில் பிரதேசத்தினை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை டினேஷ்குமார் (டினோ) என்பவர் என்றும் அவரது நெருங்கிய நண்பரான புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவினைச் சேர்ந்த சிவலிங்கம் நருமதன் என்பவரும் இக்கொலையின் பங்குதாரர் என்றும் தாங்கள் மூவரும் இணைந்தே அகிலனை வெட்டிக் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட செல்வக்குமார் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட அமரர் அற்புதராசா அகிலனின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
