நீதிமன்ற அவமதிப்பு: டயானாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரமவினால் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தனது குடியுரிமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை என்று பகிரங்கமாக கூறியதையதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்ததாக டயானா கமகே மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது.
சட்டரீதியாக தகுதியற்றவர்
இதன்போது டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், டயானா கமகே மீதான தீர்ப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும்போது, இந்த தீர்ப்பில் தான் உடன்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என இலங்கை நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்று நீதியைப் பெறுவது குறித்தும் டயானா கமகே பரிசீலித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |