வீதியில் சென்ற நாய் ஒன்றைத் தடியால் அடித்துக் கொன்றவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
வீதியில் நடந்து செல்லும் நாய் ஒன்று தடியால் அடித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணை நடத்திய பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலைய பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தச் சம்பவம், வாத்துவ பிரதேச செயலகத்தின் பொத்துப்பிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக கடந்த 2025ம் ஆண்டின் ஜுலை 08ஆம் திகதி நடைபெற்றதொரு சம்பவம் என்று தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்த பொத்துபிட்டிய பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அதன்போது அடுத்த விசாரணைக்கான தவணை வரை குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.