நாமலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு! முன்கூட்டியே அறிவித்ததால் அமைச்சருக்கு சிக்கல்..
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச, ஷஷீந்திர ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல, மேர்வின் சில்வா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைகள் வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
பிமலுக்கு அதிகாரம் இல்லை
இவை வெறும் வழக்கு தினங்கள் மட்டுமல்ல, அவர்களின் கழுத்தில் உள்ள கயிறு இறுக்கமடையும் நாள்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஒரு அமைச்சராக இருந்துகொண்டு வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் அதிகாரம் பிமல் ரத்நாயக்கவுக்குக் கிடையாது என்று திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், "வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளபோது, சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சுமத்தி தீர்ப்பை வழங்க ஜனாதிபதிக்கோ அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை.
நீதிமன்றத்தால் மாத்திரமே தீர்ப்பை வழங்க முடியும் எனும் நிலையில், முன்கூட்டியே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையினருக்கு அறிவித்துவிட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதே அமைச்சர்களின் பொறுப்பு'' என குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தில் திமுக - 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam