இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு! - தொல் திருமாவளவன் வரவேற்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சார்பில் வழக்கு தொடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 27, 2021
200 தமிழர்கள் ஒருங்கிணைந்து இவ்வழக்கைத் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/ejvWXM4RnH
இதேவேளை, ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் வரவேற்பு தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி......
கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
