டயனா கமகே மீதான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவித்து டயனா கமகேவுக்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 7 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.
மேலதிக விசாரணை
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
எனினும் பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
