பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் வழக்கு தள்ளுபடி
பருத்தித்துறை நகரசபை செயலாளரால் நகரசபை தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை நகரசபையின் புதிய சந்தைக்கு வியாபார நடவடிக்கைகள் மாற்றம் செய்யப்பட்ட போது மரக்கறி சந்தை வர்த்தகர்களால் தொடரப்பட்ட வழக்கு புதிய சபை அப்போது அமைந்திருந்தமையால் சபை தீர்மானிக்கும் என்ற அடிப்படையிலும் பல்வேறு காரணங்களாலும் வழக்கு மீள பெறப்பட்டிருந்தது.
புதிய சந்தை தொகுதி
இந்தநிலையில் பருத்தித்துறை மரக்கறி சந்தை வர்த்தகர்கள் கடந்த வியாழக்கிழமை முன்னர் இயங்கிய நவீன சந்தை தொகுதிக்கு நகர்ந்து சென்ற நிலையில் வர்த்தகர்களுக்கும் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் எண்மருக்குமிடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் வர்த்தகர்கள் தாம் புதிய சந்தை தொகுதிக்கு செல்லமாட்டோம் என்று கூறியதன் அடிப்படையில் புதிய சந்தை தொகுதிக்கு தவிசாளரால் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

அதற்கு எதிராக பருத்தித்துறை நகரசபை செயலாளர் பருத்தித்துறை பொலிஸில் தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் தவிசாளர் மற்றும் செயலாளர் அழைக்கப்பட்டு தமக்கு குறித்த முறைப்பாடு தொடர்பாக இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடக்கப்பட்ட சபை இருக்கும்போது செயலாளர் இப்படியானதொரு முறைப்பாடு கூட செய்ய முடியாது.
இவ்வாறு தீர்ப்பு ஏதும் இடம் பெறுமாக இருந்தால் அது முழு நாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சபை சொல்கின்ற அல்லது கட்டளையிடுகின்றவற்றை செய்யவேண்டும் என்றும், பொஸில் கூட தவிசாளருக்கு எதிராக கூட சட்ட ரீதியாக செய்யமுடியாது என்றும் சபை தவிசாளர் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி நடராசா சுஜீவன் தெரிவித்திருந்த நிலையில் யாராவது பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் உரிய இடத்தில் முறைப்பாடு செய்யமுடியுமே எனவும், இதனால் வழக்கை வழக்கு ஒன்றை கூட மன்றில் தவிசாளருக்கு எதிராக செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
தவிசாளர் தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செயலாளர் சார்பாக சட்டத்தரணி நிறஞ்சித்குமார் முன்னிலையாகியிருந்தார்.