ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து மட்டக்களப்பில் போராடியவர்களுக்கான வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக தெரிவிக்கப்பட்டு 30 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் வருகையின்போது தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,சிவில் சமூகப்பிரதிகள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தினார்கள்.
இதன்போது பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி பெருமளவு பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.
வாக்குமூலங்கள்
எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து 30பேருக்கு எதிரான வழக்கினை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள்,குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளாகள் என 30பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா அண்ணா துறை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஜெயசிங்கம், சி.ஜெகன்,மயூரி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
