வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
வவுனியாவில்(Vavuniya) 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |