கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பகுதியிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியின் 125 வது ஆண்டு விழா தொடர்பில் இன்று (29) விசேட ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
125 ஆவது ஆண்டு நிறைவு விழா
இதன்போது கருத்து தெரிவித்த கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட்,
எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 13ஆம் திகதி வரை இவ்விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் இதற்கென வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் உட்பட உள்ளுர் பழைய மாணவர்களைக் கொண்ட பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் முக்கிய நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam