நீதிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் குமார வெல்கம: ரிஷாட் பதியுதீன்
நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குமார வெல்கம
மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"இலங்கை அரசியலில் துணிந்து, கருத்துக்களால் எதனையும் எதிர்கொள்ளக்கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னாள் அமைச்சரும், சக நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக்கூடியவராக இருந்து வந்துள்ளார்.
இதேவேளை, முஸ்லிம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகள், கடந்த தேர்தல்களில் குமார வெல்கமவுக்கு அளிக்கப்பட்டமையானது, அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய நல்லிணக்கத்தினை எடுத்துகாட்டுகின்றது.
மக்களின் நன்மைக்காக, தான் வகிக்கும் அமைச்சுப் பதவியினைக் கூட விட்டுவிட்டு, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, துணிந்தும் அச்சமின்றியும் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமது ஆழமான கருத்துக்களை தெரிவித்து வந்த ஒரு அரசியல்வாதியாக, அமரர் குமார வெல்கமவை காணமுடியும்.
அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தமது 74 வயதில் மரணமாகியுள்ளார்.
அன்னாரது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
