60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு லெபனானில் மீண்டும் தொழில் வாய்ப்பு
60 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் லெபனானில் தொழிலுக்காக செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
லெபனானில் காணப்பட்ட கோவட் வைரஸ் தொற்று நோய் காரணமாக கடந்த மாரச் மாதம் நடைமுறைக்கு வரும் வகையில், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் லெபனானில் தொழிலுக்காக வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
தற்போது லெபனானில் கோவிட் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த எந்த தடுப்பூசியாக இருந்தாலும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருப்பது கட்டாயம் எனவும் லெபனானுக்கான இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri