வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்! லிபியா வழங்கும் வாய்ப்பு
பயிற்சி பெற்ற இலங்கையர்கள் லிபியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான லிபியா தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
லிபிய பொருளாதாரம் தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாகவும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக, இலங்கை பயிற்சி தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக லிபிய அரசாங்கத்துடன் இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கைக்கான லிபியா தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்களை விரைவில் நடத்தி இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam