இலங்கை கத்தோலிக்க திருச்சபை வத்திக்கானுடன் இணைந்து மறைமுகமாக மேற்கொள்ளும் நடவடிக்கை? பேராயர் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை கத்தோலிக்க திருச்சபை மற்றும் வத்திக்கானுடன் இணைந்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
"இலங்கை கத்தோலிக்க திருச்சபை வத்திக்கானுடன் இணைந்து ஒரு நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது, ஆனால் அது பற்றி நாங்கள் இப்போது எதையும் வெளியிட மாட்டோம்" என்று பேராயர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேவாலயம் சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
திங்களன்று ஆர்வலர் ஷெஹான் சானக்க கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட கத்தோலிக்க பேராயர், பொதுமக்களை கைது செய்வதில் பொலிஸாரின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்ததுடன், ஷெஹான் மாலக்கவின் கைது பட்டப்பகலில் நடந்த கடத்தல் என்றும் குற்றம் சுமத்தினார்.
இத்தகைய செயற்பாடுகள் நாகரீகமற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது.
சட்டமா அதிபரும் அரச ஊழியரே அன்றி அரச கைக்கூலி அல்ல என்றும் சாடினார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவர் கடமைப்பட்டுள்ளார்.
ஆனால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், சர்வதேசத்திடம் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள தயங்கமாட்டேன் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கைது தொடர்பான விடயத்தை சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க வெளிப்படுத்தி இருக்கவிட்டால் அவர் வெள்ளை வானில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை நாடு ஒருபோதும் அறிந்திருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும் முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் மக்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam