ஒரே பாலின திருமணம் குறித்த கர்தினாலின் அறிக்கை:நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஒரே பாலின திருமணம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட அறிக்கை நான் பதிலளிக்க மாட்டேன் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தோடு,இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க கார்டினாலுக்கு முழு உரிமையும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பாலின திருமணம்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது போன்ற விஷயங்களை நாங்கள் தொடங்கவில்லை. அப்படி எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், ஓரங்கட்டப்பட்ட சமூகக் குழுக்கள் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைவரும் மனிதர்கள். அந்த மனிதர்கள் அனைவரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது அல்லது அத்தகைய சட்டமூலம் எதுவும் பற்றி எந்த விவாதமும் இல்லை" என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
