பரிசுத்த பாப்பரசருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கர்தினால் மெல்கம் ரஞ்சித்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு இன்று(24) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஏப்ரல் 26 நடைபெறும் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று(23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தநிலையில், இன்றையதினம் அவர் பாப்பரசர் பிரான்சிஸிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ்
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கான மாநாட்டில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த(21) ஆம் திகதி தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
இந்தநிலையில், நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
