பாவிகள் போரில் ஈடுபட்டு பெருந்தொகை பணத்தை விரயமாக்குகின்றனர்
பாவிகள், போரில் ஈடுபட்டு பெருந்தொகை பணத்தை விரயமாக்குவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பாவிகள், போரைத் தொடுப்பதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பட்டினியை போக்கக்கூடிய செல்வத்தை அழிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராகம தேவாலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலி ஆராதனைகளின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் வாழும் பெருந்தொகை மக்களின் பட்டினியை நீக்கக் கூடிய பாரியளவு செல்வத்தை போரிற்காக விரயமாக்குகின்றனர் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் போரினால் பெருந்தொகை பணம் விரயமாக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.